search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் விபத்து"

    • வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
    • விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வலையாம்பட்டு ராஜிவ் காந்தி நகரை சேர்ந்தவர் வசந்தா (வயது 67). இவரது மகன் பிரகாஷ். வசந்தாவின் சகோதரி ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பழைய காலணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 66).

    இவர்கள் 3 பேரும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க பிரகாஷ் கவுண்ட்டருக்கு சென்றார்.

    அப்போது வசந்தாவும், சாவித்திரியும் ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் இருந்து 2-வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அக்காள், தங்கை மீது மோதியது. இதில் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தா, சாவித்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய் மற்றும் சித்தி ரெயிலில் அடிப்பட்டு இறந்ததை பார்த்து பிரகாஷ் கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தீ பிடித்தது.
    • ரெயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதம்.

    மகாராஷ்டிரா மாநிலம் வாலுஞ்ச் அருகே ஓடும் ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    நியூ அஸ்தி பகுதியில் இருந்து அகமத் நகர் சென்ற சிறப்பு ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் தீ பிடித்தது.

    இதனால், ரெயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • பீகார் ரெயில் விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு.
    • ரெயில் விபத்து காரணமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரெயில் விபத்து ஏற்பட தண்டவாளத்தில் இருந்த குறைபாடு தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதுதவிர ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென ரெயிலை நிறுத்துவதற்கு பிரேக்-ஐ அழுத்தியதால், ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ரெயில் தடம் புரண்டதால் சேதமைடந்த தண்டவாளங்கள் முழுமையாக சரி செய்யப்பட்டு விட்டதாக மூத்த ரெயில்வே அதிகாரி தெரிவித்து உள்ளார். தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, இன்று மாலை 5.12 மணிக்கு ரெயில்கள் பயணிக்க துவங்கியுள்ளது.

    எனினும், தற்போதைக்கு குறைந்த அளவிலேயே ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும் ரெயில் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை மேற்பார்வை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ரெயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெரிகிறது.

    • பீகார் ரெயில் விபத்தில் சிக்கி நான்கு பேர் உயிரிழப்பு.
    • ரெயில் விபத்து காரணமாக பல்வேறு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரெயில் விபத்து ஏற்பட தண்டவாளத்தில் இருந்த குறைபாடு தான் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதவிர ரெயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த சமயத்தில், திடீரென ரெயிலை நிறுத்துவதற்கு பிரேக்-ஐ அழுத்தியதால், ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

    "நான் எழுதும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்தேன், அப்போது திடீரென ஓட்டுனர் பிரேக்-ஐ அழுத்தியதாக உணர்ந்தேன். பிறகு, ரெயிலில் அதிர்வுகள் ஏற்பட்டு பின் மயக்கமுற்றேன். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் என் முகத்தின் மீது தண்ணீரை தெளித்தனர்," என்று ரெயிலில் பயணித்த கார்டு விஜய்குமார் தெரிவித்தார்.

    • ரெயில் விபத்து நடந்த இடத்தை மத்திய மந்திரி அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
    • மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விபத்து குறித்து அறிந்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டதில் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    பீகார் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் என இந்தியன் ரெயில்வே தெரிவித்துள்ளது.

    • ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
    • ரெயில் விபத்துக்குள்ளான இடத்தை மத்திய மந்திரி அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வுசெய்தார்.

    பாட்னா:

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ரெயில் விபத்து குறித்து அறிந்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இதற்கிடையே, ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி சவுபே நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பீகாரில் விரைவு ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

    பாட்னா:

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் முடிந்தபின் தண்டவாளம் சீரமைக்கும் பணி தொடங்கும் என பதிவிட்டுள்ளார்.

    • காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ரெயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒரே குழுவாக பணியாற்றி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகாரில் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவத்தில் மீட்பு பணி நடந்து வருகிறது. இதுவரை 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில், "பக்சர் மாவட்டத்தில் ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், மாவட்ட நிர்வாகம், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அனைவரும் ஒரே குழுவாக பணியாற்றி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போர் அறை இயங்குகிறது. மீட்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். அதன்பிறகு உடனடியாக தண்டவாளத்தை சீரமைக்கும் பணி தொடங்கப்படும்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

    • விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளது.

    பாட்னா:

    டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே இரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள்.

    இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகளை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி

    PNBE helpline:- 97714 49971

    DNR helpline:- 89056 97493

    COMM CNL:- 77590 70004

    ARA helpline:- 83061 82542

    ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    • பொதுமக்கள் சிறுவனை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை கைலாசா செட்டி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் லோகேஷ் (வயது 17). நேற்று இரவு லோகேஷ் தண்டையார்பேட்டையில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் மோதியது.

    இதில் லோகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அருகே நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் நசுங்கியது.
    • சரக்கு ரெயில் விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து காயில் ஏற்றி வந்த சரக்கு ரெயில் காஞ்சிபுரம் பழைய ரெயில் நிலைத்தில் விபத்தில் சிக்கியது. தண்டவாளத்தில் இருந்த தடுப்புகளை உடைத்து கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது.

    வாகனங்கள் மீது ரெயில் மோதியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ரெயில் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்து நின்றது. சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ரெயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது.
    • பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர்.

    மும்பை:

    மும்பை போரிவிலியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 19417) நேற்று மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டது. இந்த ரெயில் பிற்பகல் 2.15 மணி அளவில் விராரை அடுத்த ரெயில் நிலையமான வைத்தர்ணா அருகே வந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியது. என்ஜினுக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபரீதம் நடந்தது. இந்த சம்பவம் நடந்தபோது டமார் என்ற சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். சிறிது தூரம் ஓடிய என்ஜினை டிரைவர் நிறுத்தினார். ரெயில் பெட்டிகளும் சிறிது தூரம் ஓடியபடி நின்றது.

    ரெயில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரெயில் பெட்டியுடன் என்ஜினை இணைத்தனர். இதன்பின்னர் தாமதமாக அங்கிருந்து ரெயில் புறப்பட்டு அகமதாபாத் நோக்கி சென்றது. பயணிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×